இந்தியா
குறுஞ்செய்தி மூலம் தொந்தரவு: இரண்டே நாளில் தண்டனை
குறுஞ்செய்தி மூலம் தொந்தரவு: இரண்டே நாளில் தண்டனை
மகராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள கெட் நீதிமன்றம் பெண் ஒருவருக்கு குறுஞ்செய்தி மூலம் பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 48 மணி நேரத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தின் சக்கன் பகுதி காவல் நிலையத்தில் அறிமுகமில்லாத நபர் ஒருவர் தனக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு செய்து வருவதாக இளம்பெண் ஒருவர் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த அதுல் கணேஷ் படீல் என்பவரை போலீஸார் 8ம் தேதி கைது செய்து கெட் குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அந்த பகுதியிலுள்ள நிறுவனம் ஒன்றில் பாதுகாவலராக பணிபுரியும் படீலின் குற்றம் நிரூபணமானதால், 2 ஆண்டுகள் தண்டனை விதித்து கெட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய நீதித்துறை வரலாற்றில் மிகவிரைவாக வழங்கப்பட்ட தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.