ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு விசாரணைக் குழு நோட்டீஸ்

ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு விசாரணைக் குழு நோட்டீஸ்
ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு விசாரணைக் குழு நோட்டீஸ்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமை‌யிலான விசாரணைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு பாலியல் தொல்லை தந்தார் என உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் இளநிலை பணியாளர் ஒருவர் குற்றஞ்சா‌ட்டியிருந்தார். இது குறித்து விசாரி்க்க உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் 3 நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரமணா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் நேரில் ஆஜராக வேண்டுமென பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமை‌யிலான விசாரணைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விசாரணை வழக்கம் போல் அவையில் நடைபெறாது‌ என்றும் நீதிமன்ற அறையில் நடைபெறும் என்றும் இதில் தெரியவரும் தகவல்கள் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில் பாலியல் புகார் விவகாரத்தில் தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி நடப்பதாக வழக்கறிஞர் ஒருவர் ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில் அது குறித்து சீலிடப்பட்ட கவரில் தனது புகாரை நீதிமன்றத்தி‌ல் அவர்‌ ஒப்படைத்தார். இது தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்கும்படி சிபிஐ இயக்குநர், உளவுத்துறை இயக்குநர், டெல்லி காவல்துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com