வேளாண் சட்டங்களை போலவே 'அக்னிபாத்' திட்டமும் மாறப் போகிறது - ராகுல் காந்தி

வேளாண் சட்டங்களை போலவே 'அக்னிபாத்' திட்டமும் மாறப் போகிறது - ராகுல் காந்தி
வேளாண் சட்டங்களை போலவே 'அக்னிபாத்' திட்டமும் மாறப் போகிறது - ராகுல் காந்தி

வேளாண் சட்டங்களை போலவே 'அக்னிபாத்' திட்டமும் மாறப் போகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராணுவத்தில் இளைஞர்களை 4 ஆண்டுக்கால பணியில் அமர்த்தும் வகையில் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்துக்கு எதிராக வட மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தில் இணைபவர்களுக்கு ஓய்வூதியம் போன்ற சலுகைகள் கிடையாது என்பதால் இத்திட்டத்தை இளைஞர்கள் எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இன்று வெளியிட்டுள்ளார். அதில், "விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது இந்த சட்டங்களை மத்திய அரசு வாபஸ் வாங்கியே தீரும் எனக் கூறினேன். அதேபோல, ஓராண்டுக்கு பிறகு அந்த சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெற்றார். அதேபோல, அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் இளைஞர்களின் கோரிக்கைகளை பிரதமர் மோடி ஏற்க வேண்டிய சூழல் கட்டாயம் ஏற்படும். அப்போது மன்னிப்பு கேட்டு இந்த திட்டத்தை மோடி திரும்பப் பெறுவார்" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com