கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
Published on

இந்தியாவில் இரண்டு நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான நிகழ்வுகள் ஏற்பட்டன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய  முதல்  இரண்டு நாட்களில், மொத்தம் 447 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. ஆரம்பத்தில் மூன்று வழக்குகள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இரண்டு வழக்குகள் முறையே  புதுடெல்லி எய்ம்ஸ் மற்றும் வடக்கு ரயில்வே மருத்துவமனையில் இருந்து முறையே குணமாகி திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"எய்ம்ஸ் ரிஷிகேஷில் மட்டும் ஒருவர் இன்னும் கவனிக்கப்பட்டு வருகிறார், அவர் நன்றாக உள்ளார்" என்று கூடுதல் சுகாதார செயலாளர் மனோகர் அக்னானி கூறினார்.

இதுவரை பதிவாகியுள்ள பாதகமான நிகழ்வுகளில் பெரும்பாலானவை காய்ச்சல், வலி, தலைவலி, வாந்தி, மயக்கம் மற்றும் தடிப்புகள் போன்ற லேசான ஒவ்வாமை போன்றவை பதிவாகியுள்ளன. இது பற்றிய ஆய்வுகள் மற்றும் பரிசோதனை தொடர்ந்து நடந்து வருகிறது என்று அக்னானி கூறினார்.

இந்தியா தனது முதல்கட்ட கோவிட் 19 தடுப்பூசி திட்டத்தை சனிக்கிழமை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியவற்றின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுடன் தொடங்கியது.

இதற்கிடையில், சனிக்கிழமை தடுப்பூசிகள் வழங்கப்பட்ட மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த  12 சுகாதார ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விதர்பாவில் ஒன்பது சுகாதார ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர்  உஜ்ஜைனியில் உள்ள ஒரு மருத்துவமனையிலும், ஒருவர் கொல்கத்தாவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com