மத்திய இணை அமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரம் - புதிய மாற்றம்

மத்திய இணை அமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரம் - புதிய மாற்றம்
மத்திய இணை அமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரம் - புதிய மாற்றம்

மோடி தலைமையிலான மத்திய அரசில் இம்முறை மத்திய இணை அமைச்சர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30 ஆம் தேதி பதவியேற்றது. இந்தப் புதிய அரசின் அமைச்சரவையில் 31 மத்திய இணை அமைச்சர்கள் பதவியேற்றனர். இவர்களில் 9 இணை அமைச்சர்களுக்கு தனிப்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் மத்திய இணை அமைச்சர்களுக்கு மத்திய அமைச்சர்களை பொறுப்புகள் குறைந்து தான் இருந்து வந்தது. இது குறித்து பல இணை அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் மத்திய அமைச்சர்களுக்கு இம்முறை பொறுப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய அரசு பதவியேற்றவுடன் கேபினட் செயலாளர் மத்திய அமைச்சகத்தின் செயலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்புவது வழக்கம். அது போன்று இம்முறை அளித்துள்ள சுற்றறிக்கையில், அமைச்சகத்தின் துறை சார்ந்த கோப்புகள் அனைத்தும் மத்திய இணை அமைச்சரின் மூலமாக தான் மத்திய அமைச்சருக்கு செல்லவேண்டும் என்று துறையின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பு இணை அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டிருந்த பொறுப்புகள் குறித்த கோப்புகள் மட்டுமே இணை அமைச்சரிடம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை அனைத்து கோப்புகளும் இணையமைச்சருக்கு சென்றுவிட்டுதான் மத்திய அமைச்சருக்கு செல்லவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் மற்றும் நாடாளுமன்ற தீர்மானங்களை ஆகியவையும் மத்திய இணை அமைச்சர் மூலமாகவே மத்திய அமைச்சருக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இந்த விதிகளிலிருந்து விலக்காக விஐபி குறிப்பு பொறிக்கப்பட்ட கோப்புகள் மட்டும் மத்திய அமைச்சரிடம் நேரிடியாக செல்லாம் என்று இந்தச் சுற்றறிக்கை தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com