HEADLINES
HEADLINESpt

HEADLINES|மதுரையில் அமித் ஷா பேச்சு முதல் தமிழ்நாட்டில் பெய்த மழை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மதுரையில் அமித் ஷா பேச்சு முதல் தமிழகத்தில் பெய்த மழை வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா சூளுரை. திமுகவை தூக்கி எறிய மக்கள் காத்திருப்பதாகவும் மதுரை நடந்த கூட்டத்தில் பேச்சு.

  • திருப்பரங்குன்றம் முருகன் மலையை சிக்கந்தர் மலை என்று பேச திமுக அரசுக்கு என்ன துணிச்சல்?. ஜூன் 22-ஆம் தேதி நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் ஒற்றுமையை காட்ட வேண்டும் என்றும் அமித் ஷா பேச்சு.

  • தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஒடிசாவில் ஆட்சி செய்வதா என கேள்வி கேட்ட அமித் ஷா, மதுரையில் கபட வேடம் தரிப்பதாக ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்.

  • எத்தனை ‘ஷா’ கள் வந்தாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது எனவும் உறுதி. முருகன் மாநாட்டை அரசியலுக்காக பாஜக நடத்துவதாக சீமான் விமர்சனம்..

  • மதவாத அரசியலுக்கு தமிழக மக்கள் மயங்க மாட்டார்கள் என திருமாவளவன்பேட்டி.

  • மணிப்பூரில் மெய்தி சமூக தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து வன்முறை. அசம்பாவிதங்களை தடுக்க 5 மாவட்டங்களில் ஊரடங்கு, இணைய சேவை துண்டிப்பு.

  • குற்றச்சாட்டு குறித்து கடிதம் எழுதினால் மட்டுமே ராகுல் காந்திக்கு விளக்கம் அளிக்கப்படும். பிஹார் தேர்தலில் மேட்ச் ஃபிக்ஸிங் நடக்கலாம் என ராகுல் கூறியதற்கு, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்.

  • 10 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள சென்னை மெட்ரோ ரயில் சேவை . இதுவரை 39 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் .

  • திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலம். திரளான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் .

  • பக்ரீத் மற்றும் வார விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள். விழுப்புரம் மற்றும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்.

  • கிருஷ்ணகிரி, திருவண்ணாமலையில் பலத்த காற்றுடன் மழை . உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி பகுதியிலும் பரவாக மழை பெய்ததால் தணிந்தது வெப்பம்.

  • தமிழகத்தில் நாளை முதல் வரும் 14ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு. சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணிப்பு.

  • சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் ட்ரம்ப் அரசுக்கும், கலிஃபோர்னியா ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல். குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாட்டினர் போராடுவதால், களத்தில் இறங்கும் சிறப்புப் படை.

  • பிரெஞ்சு ஓபனில் டென்னிசில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வாகைசூடினார் ஸ்பெயினின் அல்கராஸ். ஐந்தரை மணி நேரம் நீடித்த இறுதிப்போட்டியில் இத்தாலியின் சின்னரை போராடி வென்றார் .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com