ஜூன் 5ல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புகிறது இஸ்ரோ!

ஜூன் 5ல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புகிறது இஸ்ரோ!

ஜூன் 5ல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புகிறது இஸ்ரோ!
Published on

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் நோக்குடன், மிக அதிக எடை கொண்ட ராக்கெட்டை ஜூன் 5ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

ஜிஎஸ்எல்வி எம்.கே-III (GSLV Mk-III) எனப்படும் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக, சுமார் 200 யானைகள் எடை கொண்ட, GSLV Mk-III என்ற ராக்கெட், ஜூன் முதல் வாரத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட், 4 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை விண்வெளிக்கு கொண்டு செல்லும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் 3 பேரை விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், அடுத்த 10 ஆண்டுகளில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திறன் கொண்ட 4-வது நாடாக திகழும் பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும். பலமுறை சோதனைகள் நடைபெற்ற பின்னர்தான் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் திட்டம் முழுமையாகத் தொடங்கப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com