HEADLINES|அடுத்தாண்டு சாதிவாரி கணக்கெடுப்பு முதல் உயிரிழந்த RCB ரசிகர்கள் வரை!
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்தாண்டு அக்டோபர் மாதம் தொடக்கம். இரண்டு கட்டங்களாக கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு.
மக்கள் தொகை கணக்கெடுப்பை 2027ம் ஆண்டுக்கு தள்ளிப்போட்டு தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பாஜக சதித்திட்டம். தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் RCB அணியின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல். 11 பேர் உயிரிழந்த சோகம். காயம் அடைந்தவர்களுக்கு முதல்வர் சித்தராமையா நேரில் ஆறுதல்.
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவு. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு.
ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட துயர சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக பிரதமர் மோடி இரங்கல். மனித உயிர்களை விட கொண்டாட்டம் பெரிதல்ல என ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு .
நெரிசலில் சிக்கி ரசிகர்கள் உயிரிழந்த சம்பவத்தால் மனமுடைந்து போனேன் என ஆர்.சி.பி அணி வீரர் விராட் கோலி வேதனை.
மொழி சர்ச்சை விவகாரத்தில் உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு கமல்ஹாசன் நன்றி. உயிரே... தமிழே... என்று கூறியதற்கான முழு அர்த்தத்தை உணர்வதாக நெகிழ்ச்சி.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் இன்று ரிலீஸ். சின்மயி பாடிய முத்த மழை பாடல் தக் லைஃப் ஆல்பத்தில் 10ஆவது பாடலாக இணைப்பு.
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர இதுவரை இரண்டு லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பம். உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் தகவல்.
டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு. அடுத்த மாதம் ஏழாம் தேதி விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு திருச்சி நீதிமன்றம் உத்தரவு.
கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலரிடம் மனுதாரர் 25 ஆயிரம் ரூபாய் செலுத்த உத்தரவு.
கொடைக்கானலில் மலேசிய தமிழர்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே கைகலப்பு. சுற்றுலாத் தலத்துக்கான நுழைவுக்கட்டணம் தொடர்பாக வாக்குவாதம்.
மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை. கணக்கில் வராத ஒரு லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம். சென்னை, மதுரை, நெல்லை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை வார்டுகளுக்கு ஏற்பாடு.