HEADLINES | டெல்லி சென்ற அன்புமணி முதல் அமெரிக்காவில் நடுவானில் பழுதான விமானத்தின் ஏசி வரை!
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களை உடனடியாக மீட்க வலியுறுத்தல்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக அதிமுக ஆட்சியமைக்கும் என்று, அமித் ஷா கூட்டணி ஆட்சி அமையும் என்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி பதிலடி.
வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி. அதிமுகவை யாராலும் கபளீகரம் செய்ய முடியாது என பழனிசாமி பேச்சு.
திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். தந்தை மகன் இடையே கருத்து வேறுபாடு நிலவும் சூழலில் பயணம்.
தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வலுப்படுத்த போகிறோம் என தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் பேட்டி.
பள்ளி நுழைவாயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஏற்பாடு என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி.
சிவகங்கை அருகே காவல் நிலைய விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்த விவகாரத்தில், 2 மணி நேரத்துக்கும் மேலாக மாஜிஸ்திரேட் விசாரணை. பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு.
பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் கையகப்படுத்தப்பட திட்டமிட்டுள்ள நிலங்களுக்கான விலை நிர்ணயம். 3 ஆயிரத்து 331 ஏக்கர் பரப்பிலான நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு.
திருப்பூரில் புதுமணப்பெண் தற்கொலை செய்த வழக்கில் மூன்று பேர் கைது . பெண்ணின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை கைது செய்து விசாரணை.
ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் எனும் அறிவிப்பை திரும்ப பெற்றது மஹாராஷ்டிரா. தீர்மானத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பின்வாங்கியது பாஜக அரசு.
இந்திய ரயில்வேயில் மேலும் ஒரு புதிய மாற்றம். ரயில்கள் புறப்படும் 8 மணி நேரத்துக்கு முன்பே இறுதி முன்பதிவுப் பட்டியல்.
உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதல். F16 போர் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் புகார்.
அமெரிக்காவில் நடுவானில் விமானத்தில் ஏசி பழுது. தியானம் செய்யச் சொன்ன பணியாளர்களால் பயணிகள் கொந்தளிப்பு.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் நட்பு மலர்ந்தது எப்படி? மண முறிவால் மன அழுத்தத்தில் இருந்தபோது சல்மானின் நட்பு கிடைத்ததாக அமீர் கான் உருக்கம்.