HEADLINES|வெள்ளத்தில் மிதக்கும் வடகிழக்கு மாநிலங்கள் முதல் இறுதிப்போட்டியில் RCB vs PBKS..!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை. 30 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.
நியாயமாகவும், விரைவாகவும் குற்றவாளிக்கு கடும் தண்டனையை திமுக அரசு பெற்று தந்துள்ளதாக முதல்வர் பெருமிதம். சாரைக் காப்பாற்றியது யார் என்ற கேள்விகளுக்கு அதிமுக ஆட்சி அமைந்ததும் பதில் கிடைக்கும் என எடப்பாடி பழனிசாமி பதிலடி.
சென்னையில் கொரோனாவால் 25 வயது இளைஞர் உயிரிழப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்.
திருமணம், வங்கி மற்றும் கல்வி ஊக்கத்தொகை மோசடியில் ஈடுபட்ட ஏழு பேர் கைது தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய ஆபரேஷன் ஹைட்ரா நடவடிக்கையில் சிக்கினர்.
மொழி, சாதி அடிப்படையில் மக்களை பிரிப்பதால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு. தெலங்கானா மாநில தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.
தமிழ்நாடு திரைப்பட நடன இயக்குனர்கள் சங்க தலைவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள். பதவி விலக வலியுறுத்தி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய உறுப்பினர்களால் பரபரப்பு.
மழை வெள்ளத்தில் மிதக்கும் வடகிழக்கு மாநிலங்கள். உயிரிழந்தோர் எண்ணிக்கை 36ஆக உயர்வு.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டுகோள்.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இருநாட்டு பிணைக் கைதிகளை பரஸ்பரம் விடுவிக்கும் பட்டியலை பகிர்ந்துகொள்ள முடிவு.
இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலை வெடித்து சிதறியது. 6500 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை எழும்பிய வீடியோ காட்சிகள்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? இறுதிப்போட்டியில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக தென்னாப்பிரிக்கா வீரர் கிளாசென் அறிவிப்பு. டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் திட்டம்.