HEADLINES|கூலி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் முதல் கடும் சேதமடைந்த ஈரான் அணுசக்தி தளங்கள் வரை!
அமெரிக்காவின் தாக்குதலில் கடுமையாக சேதம் அடைந்த அணுசக்தி தளங்கள். முதல் முறையாக ஒப்புக் கொண்டது ஈரான்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்துக்கு தாமே காரணம் என 18 ஆவது முறையாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பெருமிதம்.
கிராமப்புறங்களில் மருத்துவ உட்கட்டமைப்புகளை மேம்படுத்த பிரதமர் மோடி அறிவுறுத்தல். மத்திய, மாநில அரசு அதிகாரிகள் இணைந்து பணியாற்றவும் வேண்டுகோள்.
கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை அமலில் உள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே விமர்சனம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் சாலை வலம். வழி நெடுக திரண்டு பொதுமக்கள் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு.
திமுக ஆட்சியில் ஏற்றப்பட்ட வரி மற்றும் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என தோன்றவில்லையா? என முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி.
பல்வேறு தடைகளை தாண்டி விண்வெளிக்கு வெற்றிகரமாக புறப்பட்டார் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா. 2 வாரங்கள் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள திட்டம்.
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை நண்பகலில் நடத்த வலியுறுத்தல். உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.
கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு. கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளிலிருந்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு.
கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம். ஆறுகளில் வெள்ளப்பெருக்கு. பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம்.
தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
கோவில்பட்டியில் ரயில் நிற்கும் முன் ஏற முயன்றதால் விபரீதம். ரயிலுக்கும் - நடைமேடைக்கும் இடையே சிக்கித்தவித்த நபர் நீண்ட போராட்டத்துக்கு பின் மீட்பு.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுபோதையில் கோயில் பூசாரிகள் நடனமாடியதாக புகார். பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறியதாகவும் குற்றச்சாட்டு.
திருவள்ளூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை. தப்பியோடிய கொலையாளிகளை தேடும் காவல் துறையினர்.
அடுத்த ஆண்டு முதல் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஒப்புதல்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு. அனிருத் இசையில் டி.ஆர். பாடியுள்ள சிக்கிட்டு பாடலை வைரலாக்கும் ரசிகர்கள்.