Headlines
Headlinespt

Headlines|ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிப்பு முதல் ஃபைனலில் பஞ்சாப் அணி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிப்பு முதல் தகுதி பெற்றது பஞ்சாப் அணி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் இன்று பள்ளிகள் திறப்பு. பென்சில், பேனா, புத்தகப் பை உள்ளிட்ட பொருட்கள் வாங்க கடைகளில் அலைமோதிய கூட்டம்.

  • கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்றவர்கள், பள்ளிகள் இன்று திறக்கப்படுவதால் சொந்த ஊர் திரும்பினர். இதனால், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல்.

  • அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிப்பு. உச்சபட்ச தண்டணை வழங்க அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்பு.

  • ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது பஞ்சாப் அணி. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை.

  • ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை கோப்பை வெல்லாத இரு அணிகள் இறுதிப்போட்டியில் மோதல். 'ஈ சாலா கப் நமதே' என்ற பெங்களூருவின் கனவு இந்த ஆண்டாவது நனவாகுமா?

  • தமிழ்நாட்டை பாஜக கட்டுப்பாட்டில் கொண்டுசெல்ல பழனிசாமி துடிக்கிறார். அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சியால் அதல பாதாளம் சென்ற தமிழ்நாட்டை மீட்டிருப்பதாகவும் முதல்வர் பேச்சு.

  • அதிமுக யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை என கோவையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி. திமுகதான் நாட்டிற்கு துரோகம் செய்திருப்பதாகவும் சாடல்.

  • மாநிலங்களவை தேர்தலில் 2 இடங்களிலும் அதிமுகவே போட்டி. வழக்கறிஞர்கள் இன்பதுரை, தனபால் களம் காண்பார்கள் என அறிவிப்பு.

  • அதிமுக கூட்டணியில் இருப்பதை உறுதிபடுத்தாத தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா. தேர்தலை மனதில் வைத்து அதிமுக செயல்படுவதால் தேமுதிகவும் அவ்வாறே செயல்படும் என பதிலடி.

  • பூம்புகாரில் வரும் 10ஆம் தேதி நடக்கும் பாமக மகளிர் பெருவிழாவில் பங்கேற்க அன்புமணிக்கு ராமதாஸ் அழைப்பு. தந்தை, மகன் இடையே மோதல் நிலவி வந்த சூழலில், விரைவில் இருவரும் சந்திப்பார்கள் என கட்சி நிர்வாகிகள் எதிர்பார்ப்பு..

  • தமிழ் திரைப்பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் உயிரிழப்பு. மதயானைக்கூட்டம், இராவணக்கோட்டம் படங்களை இயக்கி கவனம் பெற்றவர்.

  • ரஷ்யாவின் விமானப் படை தளங்கள் மீது உக்ரைன் ட்ரோன்கள் மூலம் கடுமையான தாக்குதல். இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரிப்பு.

  • உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் 41 விமானங்கள் அழிக்கப்பட்டதாக தகவல். 472 ட்ரோன்கள் மற்றும் 7 ஏவுகணைகள் ஏவி ரஷ்யாவும் பதில் தாக்குதல்.

  • ஸ்வரங்களில் சாகசம் செய்யும் இளையராஜாவுக்கு இன்று 83வது பிறந்நாள். இதயங்களை இசையால் நிரப்பும் இசைஞானியை வாழ்த்துகிறது புதிய தலைமுறை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com