headlines
headlinespt

HEADLINES |புனேவில் ஆற்றுப்பாலம் இடிந்தது முதல் ஈரான் இஸ்ரேல் போரை நிறுத்தம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, புனேவில் ஆற்றுப்பாலம் இடிந்து 4 பேர் பலி முதல் ஈரான் இஸ்ரேல் போரை நிறுத்த ட்ரம்ப் வலியுறுத்தல் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • லண்டனில் இருந்து சென்னை நோக்கி பறந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம். அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய அதே ரக போயிங் விமானம், பெரும் ஆபத்தில் இருந்து தப்பியது.

  • அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 47 பேரின் அடையாளம் உறுதி. அடையாளம் காணப்பட்ட குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு.

  • புனேவில் ஆற்றுப்பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு.

  • உலகின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 50 விழுக்காடு யுபிஐ மூலம் இந்தியாவில்தான் நிகழ்கின்றன என சைப்ரஸில் தொழிலதிபர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.

  • தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு. சமூக வலைத்தளப் பக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிவு.

  • தஞ்சையில் பொதுமக்களை சந்தித்தபடி இரண்டு கிலோ மீட்டர் தூரம் சாலைவலம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார்.

  • கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நூதன போராட்டம். பனைமரம் ஏறும் தொழிலாளர்களுடன் இணைந்து பனை மரம் ஏறிய சீமான்.

  • கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சீமானை கைது செய்யாவிட்டால் கடும் போராட்டம் வெடிக்கும். புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை.

  • தந்தை ராமதாஸிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார் அன்புமணி. மகனாகவும் பாமக தலைவராகவும் தாங்கள் சொல்வதை செய்யத் தயார் என்றும் பேச்சு.

  • வாணியம்பாடியில் மணல் கடத்தலைத் தட்டிக் கேட்ட குடும்பத்தினர் மீது தாக்குதல். அரசு மருத்துவமனைக்குள் புகுந்து தாக்கிய மணல் கொள்ளையர்களால் அதிர்ச்சி.

  • நீலகிரி மாவட்டத்தில் இன்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு. கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.

  • கேரளாவின் கோழிக்கோட்டில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம். வயநாடு, மலப்புரம், காசர்கோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட்.

  • கர்நாடக மாநிலம் மங்களூருவில் கனமழையால் அடியோடு சாய்ந்த சுற்றுச்சுவர். எதிர்வீட்டில் இருந்த இரும்புக் கதவும் பெயர்ந்து விழுந்த சிசிடிவி காட்சிகள்.

  • இஸ்ரேலின் வடக்கு, தெற்கு பகுதிகளில் ஈரான் வீசிய ஏவுகணைகளால் கட்டடங்கள் சேதம், பலர் படுகாயம். ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 224 ஆக உயர்வு.

  • ஈரான் உயர்மட்டத் தலைவரைக் கொல்ல ரகசியத் திட்டம் தீட்டியதா இஸ்ரேல்?. கமேனியைக் கொல்லும் திட்டத்தை அதிபர் ட்ரம்ப் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல்.

  • ஈரானும், இஸ்ரேலும் போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தல். இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையேயான சண்டையை, தான் நிறுத்தியதாக மீண்டும் குறிப்பிட்டு பதிவு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com