HEADLINES|நாட்டையே உலுக்கிய குஜராத் விமான விபத்து முதல் விமானம் விபத்தில் கட்டடமும் இடிந்து பலி வரை!
நாட்டையே உலுக்கிய குஜராத் அகமதாபாத் விமான விபத்து. விமானத்தில் பயணித்த 242 பேரில், 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த, பிரிட்டன் குடியுரிமை பெற்ற நபர் உயிர்பிழைத்த அதிசயம். காயங்களுடன் நடந்து செல்லும் வீடியோ வெளியானது.
விபத்துக்குள்ளான விமானம் விழுந்ததில், கீழே இருந்த கட்டடமும் இடிந்து விபரீதம். மருத்துவ மாணவர்கள் உள்பட 7 பேர் உயிரிழப்பு, 60க்கும் மேற்பட்டோர் காயம்.
அகமதாபாத் விமான விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி. ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சில விநாடிகளிலேயே விமானம் கீழே விழுந்து வெடித்த பயங்கரம்.
விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம். மாநில பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான சி.ஆர்.பாட்டீல் அறிவிப்பு.
அகமதாபாத்திற்கு இன்று பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி. விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய இருப்பதாக தகவல்.
விமான விபத்தில் உயிர்பிழைத்த நபரை நேரில் சந்தித்த மத்திய அமைச்சர் அமித்ஷா. காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கும் ஆறுதல்.
அகமதாபாத் விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழப்பு. விமானத்தில் குடும்பத்துடன் எடுத்த கடைசி செல்ஃபியைக் கண்டு பலரும் சோகம்.
விமான விபத்தில் உயிரிழந்த மணிப்பூரை சேர்ந்த இரு விமான பணிப்பெண்கள். புகைப்படங்களை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுத குடும்பத்தினர்.
விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு டாடா குழுமம் சார்பில் தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு. மோசமான நாள் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் வருத்தம்.
விமான விபத்தில் உயிரிழந்தோரின் பெயர்களை ஒவ்வொன்றாக திரையில் காட்டிய அதிகாரிகள். சொந்தங்களை பறிகொடுத்த உறவினர்கள் கதறல்; நெஞ்சை உலுக்கும் சோகம்.
முதல் முறையாக விபத்தை சந்தித்த போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். விபத்துக்கு சில நொடிகளுக்கு முன், ஆபத்தில் இருப்பதாக கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தெரிவித்த விமானி.
அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவு. விரிவான விசாரணைக்காக உயர்மட்டக் குழுவை அமைத்தது மத்திய அரசு.
விமான விபத்துக்கு பறவை மோதல் காரணமா, தொழில்நுட்பக் கோளாறா? என விசாரணை. சதிச் செயலா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரம்.
விமான விபத்து குறித்த விசாரணையில் இந்தியாவுக்கு உதவ நிபுணர் குழுவை அனுப்பும் பிரிட்டன் அரசு. விசாரணைக் குழுவை இந்தியாவுக்கு அனுப்ப இருப்பதாகவும் அமெரிக்கா அறிவிப்பு.
அகமதாபாத் விமான விபத்து குறித்து ரஷ்யா, கனடா அதிபர்கள் இரங்கல். ஏர் இந்தியா விபத்து, உலகின் மோசமான விமான விபத்துகளில் ஒன்று என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு.