HEADLINES
HEADLINESpt

HEADLINES|பெங்களூரில் வெளுத்து வாங்கிய கனமழை முதல் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பெங்களூரில் வெளுத்து வாங்கிய கனமழை முதல் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக நீரை திறந்துவிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை. திருவண்ணாமலையில் வெள்ளப் பெருக்கால் பொதுமக்கள் அவதி.

  • நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு. தயார் நிலையில் இருக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தல்.

  • பெங்களூருவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழை. நகரத்தின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மக்கள் கடும் பாதிப்பு.

  • நேர்மையான அறிவின் மூலம் தமிழ் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த வேண்டும் என கீழடி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் வலியுறுத்தல்.

  • ஈரோடு பவானி பகுதியில் சாலைவலம் சென்றார் முதல்வர் ஸ்டாலின். வழிநெடுகிலும் நின்ற மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

  • பொதுமக்களிடம் இருந்து வாங்கும் மனுக்களில் கூட முதல்வர் விளம்பரம் தேடுவதாக பழனிசாமி விமர்சனம். ஒரு திட்டத்திற்கு பல்வேறு பெயர்களைச் சூட்டும் விளம்பர மாடல் அரசு என்றும் பதிவு.

  • பேருந்தில் ஓசியில் செல்கிறீர்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ. ஆணவத்திற்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள் என அண்ணாமலை கண்டனம்.

  • கர்நாடகா, ஆந்திரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் புதிய ரயில் திட்டங்கள். 6 ஆயிரத்து 405 கோடி ரூபாய் நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

  • கும்பமேளா உயிரிழப்பில் உண்மை மறைக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு. இதுதான் உண்மையான பாஜக மாடல் என உத்தர பிரதேச அரசு மீது விமர்சனம்.

  • தேனிலவுக்குச் சென்ற இளைஞரை மனைவியே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம். மறைந்த இளைஞரின் தாயாரிடம் கண்ணீர்விட்டு கதறி அழுது மன்னிப்புக் கேட்ட பெண்ணின் சகோதரர்.

  • சூரியகாந்தி, பாமாயில் போன்றவைகளின் கச்சா சமையல் எண்ணெய்க்கான சுங்கவரி 10 விழுக்காடாக குறைப்பு. இறக்குமதி வரி குறைப்பால், சந்தைகளில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு.

  • அமெரிக்கா உடனான உறவு இந்தியாவுக்கு மிகவும் முக்கியம் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி. ட்ரம்ப் மீது நம்பிக்கை உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில்.

  • சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகி இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு. சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 55% ஆக குறைக்க முடிவு.

  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்கு ஆல்அவுட். முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com