HEADLINES|திருவண்ணாமலையில் பெய்த கனமழை முதல் தோனிக்கு ICC கௌரவம் வரை!
சென்னை, உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை. செய்யாறில் சூறைக்காற்றால் முறிந்து விழுந்த மரங்கள், வாகனங்கள் சேதம.
கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை. திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்துரைப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய குழுக்கள். எம்.பிக்கள் மற்றும் அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று சந்திப்பு.
பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து துறை ரீதியாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை. மக்கள் நல திட்டங்கள் விரைவாக சென்று சேரும் வகையில் செயல்பட அறிவுறுத்தல்.
2026இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு எதிர்ப்பு. திராவிட சித்தாந்தம் இருக்கும்வரை தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியாது என திமுக எம்.பி. ஆ.ராசா பதிலடி.
கல்வி திட்ட நிதியை விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிய தமிழக அரசின் மனு. அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.
சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்க அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை. கடன் அட்டை திட்டத்தில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது குறித்து கூட்டுறவுத்துறை விளக்கம்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜலட்சுமி, திமுக முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வன் தவெகவில் ஐக்கியம். தவெகவில் இணைந்த ஒய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜுக்கு கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் பதவி.
சென்னையில் அரசு சேவை இல்லத்தில் தங்கிப் பயிலும் 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை. கைதான காவலாளியை, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு.
மதுரை ஆரப்பாளையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரை காலணியால் அடித்த விவகாரம். சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தவறுக்கு மன்னிப்பு கேட்ட உதவி மேலாளர்.
தனுஷ்கோடி தெற்கு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கும் பிளாஸ்டிக் மூட்டைகள். அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை.
கேரளாவில் தீ விபத்து ஏற்பட்ட கப்பலில் இருந்து 18 பேர் மீட்பு. 6 பேர் மேல் சிகிச்சைக்காக மங்களூரு மருத்துவமனையில் அனுமதி.
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா செல்ல இருந்த ஆக்சியம்-4 பயண திட்டம் மோசமான வானிலையால் ஒத்திவைப்பு. நாளை பயணம் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவிப்பு.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் இணைந்தார் எம்.எஸ்.தோனி. மேத்யூ ஹைடன், ஹசிம் ஆம்லா, கிரேம் ஸ்மித், வெட்டோரிக்கும் கௌரவம்.