Headlines|அழகிரியை சந்தித்த முதல்வர் முதல் வந்தே பாரத் ரயிலில் அசைவம் நீக்கப்பட்டதாக சர்ச்சை வரை!
மதுரையில் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் சாலை வலம். வழியெங்கும் மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு.
மதுரையில் மு.க.அழகிரியை நேரில் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின். டிவிஎஸ் நகரில் உள்ள இல்லத்தில் இருவரும் சந்தித்து பேச்சு.
மதுரை பந்தல்குடி கால்வாயில் வைக்கப்பட்ட திரைச்சீலை அகற்றம். கால்வாயை நேரில் ஆய்வு செய்து, தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவு.
மதுரையில் முதல்வர் தலைமையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம். அமைப்பு ரீதியாக முக்கிய மாற்றங்களை கொண்டுவர கட்சித்தலைமை திட்டம் எனத் தகவல்.
துப்பாக்கி குண்டுகளால் சுட்டால் பீரங்கி குண்டுகளால் பதிலடி கிடைக்கும் என பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை.
பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்தியாவின் போர் விமானங்கள் சில சுட்டு வீழ்த்தப்பட்டன. முப்படைகளுக்கான தலைமை தளபதி அனில் சவுகான் முதல் முறையாக ஒப்புதல்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான உண்மைத் தகவல்களை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்.
பாகிஸ்தானின் எல்லையை ஒட்டிய மாநிலங்களில் "ஆபரேஷன் ஷீல்டு” பாதுகாப்பு ஒத்திகை. ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், ஹரியானாவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
2025ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றார் தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா. ஐதராபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் மகுடம் சூடிய அழகிக்கு குவியும் பாராட்டு.
தொழில்நுட்பக் கோளாறால் வந்தே பாரத் ரயிலில் அசைவ உணவுகளை பயணிகளால் தேர்வு செய்ய முடியவில்லை. வந்தே பாரத் ரயிலின் விருப்ப உணவுப் பட்டியலில் அசைவம் நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், தெற்கு ரயில்வே விளக்கம்.
அகில இந்திய வானொலி பண்பலைகளில் மீண்டும் ஒலிக்கும் தமிழ் பாடல்கள். இரவு நேரங்களில் இந்தி பாடல்கள் ஒலிபரப்பப்படுவது குறித்து செய்தி வெளியிட்ட நிலையில் ஒரே நாளில் நடவடிக்கை.
பாமகவுக்கு இனி தாமே தலைவர் என்றும், ராமதாஸ் வழிகாட்டி எனவும் அன்புமணி பிரகடனம். ராமதாஸ் கொள்கையில் கட்சி செயல்படும் எனவும் விளக்கம்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு 25 நாட்களில் 2 லட்சத்து 74 ஆயிரம் பேர் விண்ணப்பம். 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் கட்டணம் செலுத்தி இருப்பதாகவும் அறிவிப்பு.
வேலூரில் சிகிச்சையின் போது பச்சிளம் குழந்தையின் கைவிரல் துண்டான சம்பவம். செவிலியர் மீது காவல் துறை வழக்குப்பதிவு.
ஐபிஎல் இறுதிப்போட்டியில் பெங்களூருவுடன் போட்டி போடப் போவது யார். இன்று நடைபெறும் குவாலிஃபயர் ஆட்டத்தில் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதல்.
ஆசிய தடகளப் போட்டியின், மகளிர் 100 மீட்டர் தொடரோட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம். 8 தங்கம் உட்பட 24 பதக்கங்களுடன் இரண்டாவது இடம் பிடித்து இந்தியா அசத்தல்.
மகன் பட்டம் பெற்றதை இணைந்து கொண்டாடிய தனுஷ் - ஐஸ்வர்யா. தனது பேரன் முதல் மைல்கல்லை தாண்டி விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்து இணையத்தில் பதிவு.