திருமலையில் யானைகள் நடமாட்டம்: ஸ்ரீவாரி பாதம் செல்ல அனுமதி மறுப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள நாராயணகிரி மலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பக்தர்களுக்கு அனுமதி மறுக் கப் பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள திருமலையில் நாராயணகிரி மலையில் ஸ்ரீவாரி பாதம் மற்றும் தர்மபுரி வேதபாடசாலைக்கு மத்தி யில் ஒரு குட்டி யானையுடன் நான்கு பெரிய யானைகள் சுற்றி வருகிறது. இதன் காரணமாக பக்தர்கள் ஸ்ரீவாரி பாதம் செல்வதற்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேவஸ்தான மண்டல வன அலுவலர் பணிகுமார் இதுபற்றி கூறும்போது, சேஷாச்சல வனப்பகுதியில் சுற்றி வரும் யானைகள் ஆண்டுக்கு ஒரு முறை இந்த இடங்களுக்கு வருவது வழக்கம். சில நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் வேறு இடத்திற்கு சென்று விடும். இருப்பினும் பக்தர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீவாரி பாதத்திற்கு பக்தர்களை அனுமதிக்கவில்லை’ என்றார்.