HEADLINES|இந்தியாவுக்கு வரி விதித்த அமெரிக்கா முதல் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி வரை!
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என
ட்ரம்ப் அறிவிப்பு. இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விளக்கம்.
அமெரிக்க அதிபரை இந்திரா காந்தி போல் உறுதியாக நின்று எதிர்க்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ்
மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வேண்டுகோள்.
காங்கிரஸ் கட்சிக்கு தேசிய பாதுகாப்பு முக்கியமல்ல என மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சனம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாஜக அரசு மீட்கும் எனவும் உறுதி.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மாநிலங்களவையில் பிரதமர் விளக்கம்
அளிக்காததற்கு கண்டனம்.
மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
திருவண்ணாமலை, சிதம்பரத்தில் அடுத்த மாதம் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என தகவல்.
தமிழரின் தொன்மையான கீழடி நாகரீகத்தை வெளிப்படுத்தியது அதிமுக அரசு என பழனிசாமி பேச்சு.
கீழடி அகழாய்வு அறிக்கை விவகாரத்தில் திமுக அரசுக்கு அதிமுக துணை நிற்கும் எனவும் உறுதி.
வணிகர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று உரிமக் கட்டணம் குறித்து ஆராய குழு அமைப்பு. கிராமப்புற சிறு வணிகர்களுக்காக பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிக்க
வேண்டாம் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி விமர்சனம்.
தமிழ்நாடு பாஜகவில் புதிய நிர்வாகிகள்
நியமனம். மாநில துணைத்தலைவராக
நியமிக்கப்பட்டார் குஷ்பு. அடுத்தகட்ட பட்டியலில் தமக்கான
பொறுப்பு வரும்... புதிய பாஜக மாநில நிர்வாகிகள்
பட்டியலில் பெயர் இடம்பெறாத நிலையில் விஜயதாரணி பேட்டி..
எல்.பி.ஜி சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
வாபஸ்... இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன்
நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு.
நெல்லையில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கு. பெண்ணின் தந்தையான காவல் உதவி
ஆய்வாளர் கைது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கு எவ்வாறு நடத்தப்பட உள்ளது? தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி...
பல கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி பண மோசடி. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது
செய்தது டெல்லி காவல் துறை.
நிசார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது, ஜி.எஸ்.எல்.வி. எஃப் 16 ராக்கெட். இந்தியா-அமெரிக்கா கூட்டு தயாரிப்பான நிசார் திட்டம் வெற்றி அடைந்ததாக இஸ்ரோ அறிவிப்பு...
காசாவில் போர், பட்டினியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியது.. மனிதாபிமானத்துடன் உணவு பொருட்களை அனுப்பி வரும் அண்டை நாடுகள்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம். தொடரை சமன் செய்ய இந்திய அணி முனைப்பு...