HEADLINES
HEADLINESமுகநூல்

HEADLINES|ட்ரம்ப் பெயரைக் குறிப்பிடாமல் மோடி விளக்கம் முதல் விண்ணில் பாயும் நிசார் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ட்ரம்ப் பெயரைக் குறிப்பிடாமல் மோடி விளக்கம் முதல் விண்ணில் பாயும் நிசார் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நிறுத்துமாறு எந்த உலக தலைவரும் கூறவில்லை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயரைக் குறிப்பிடாமல் மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்.

  • நாட்டில் ஏற்பட்ட பிரிவினைக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியாளர்களே காரணம் என அமித் ஷா குற்றச்சாட்டு. பயங்கரவாதத்தை கண்டு மோடி அரசு அமைதியாக இருக்காது எனவும் பேச்சு.

  • பஹல்காம் தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தோல்வி என காங்கிரஸ் தலைவர் கார்கே காட்டம்.. பாகிஸ்தான் உடனான போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியது வெட்கக்கேடு என்று திமுகவின் ஆ.ராசா விமர்சனம்.

  • தேர்தல் நெருங்கும் போது பாஜகவினருக்கு தமிழ் பெருமிதம் நினைவுக்கு வந்துவிடும் என கனிமொழி விமர்சனம். தமிழன் கங்கையை வெல்வான் என்றும் உறுதி.

  • திமுக ஆட்சியில் கிராமங்களில் கூட இனி டீக்கடை, சலூன் கடை வைக்க முடியாது. 500 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அரசு வரி கேட்பதாக பழனிசாமி விமர்சனம்.

  • இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 20 முதல் 25 விழுக்காடு வரை வரி விதிக்கப்படலாம். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகவல்.

  • இன்று விண்ணில் பாய்கிறது இந்திய - அமெரிக்க கூட்டு தயாாிப்பான நிசார் செயற்கைக்கோள். பூமியின் மேற்பரப்பில் நிகழும் மாற்றங்களை துல்லியமாக கண்காணிக்க திட்டம்.

  • நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

  • நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியீடு. செப்டம்பர் 18இல் காலாண்டுத் தேர்வும், டிசம்பர் 15இல் அரையாண்டுத் தேர்வும் தொடக்கம்.

  • நெல்லை ஆணவ படுகொலை வழக்கில், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருடன் காவல் துறை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி. சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்தால் மட்டுமே உடலை பெறுவோம் என திட்டவட்டம்.

  • திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ராஜு விஸ்வ கர்மாவுக்கு 4 நாள் போலீஸ் காவல். காவல் துறைக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவு.

  • மடப்புரம் கோயில் ஊழியர் அஜித்குமார் மரண வழக்கு.. நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிகிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை.

  • இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் ஓவல் மைதானத்தின் பராமரிப்பாளர் இடையே கடும் வாக்குவாதம். ஆடுகளத்தில் இருந்து சிறிது தூரம் விலகி நிற்குமாறு கூறியதால் சண்டை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com