HEADLINES | ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதம் முதல் விஜய்க்கு பாஜக கண்டனம் வரை!
இந்திய பெண்களின் சிந்தூர் அழிக்கப்பட்டதற்கு வலுவான பதிலடி கொடுக்கப்பட்டதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு. ஆபரேஷன் சிந்தூரின் போது, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பேசவில்லை என அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்.
ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதம். மக்களவையில் பிரதமர் மோடி இன்று உரையாற்ற இருப்பதாக தகவல்.
பஹல்காம் தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவே பொறுப்பு என காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கொகோய் குற்றச்சாட்டு.
பயங்கரவாதிகள் எப்படி பஹல்காமுக்கு வந்தனர்; இன்னும் ஏன் பிடிபடவில்லை எனவும் கேள்வி.
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை. பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா என சந்தேகிக்கப்படும் நிலையில் விசாரணை.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து பேர் கைது. ஒரு படகையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் குடியரசுத்தலைவர் கேள்விக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு. குடியரசுத்தலைவரின் விளக்கக் குறிப்புக்கு பதில் அளிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் என வலியுறுத்தல்.
விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தில் பழைய நடைமுறையையே பின்பற்றுக. மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசை வீழ்த்துவோம். தமிழக மக்களுக்கு நிம்மதியான நல்லாட்சியை வழங்கும்வரை ஓயப்போவதில்லை என பழனிசாமி அறிக்கை.
திமுக, பாஜகவின் அரசியல் ஆதாய நாடகத்தை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என விஜய் விமர்சனம். சோழப் பேரரசர்களுக்கு திமுக உரிய மரியாதை அளித்திருந்தால் பாஜக அரசு இதை கையில் எடுத்திருக்காது எனவும் கருத்து.
விஜய்க்கு அரசியலும் தெரியவில்லை, மரபுகளும் தெரியவில்லை என திமுக பதில். வரலாற்றையும் ஆன்மீக விழாக்களையும் இழிவுபடுத்த வேண்டாம் என விஜய்க்கு பாஜக கண்டனம்.
டெல்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு. தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை உடனே வழங்க வலியுறுத்தல்.
நெல்லையில் ஐடி ஊழியர் கொலை வழக்கில் கைதான இளைஞருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல். தொடர் அழுத்தத்தால் கைதான இளைஞரின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு.
மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு நீர் திறப்பால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. நாமக்கல், ஈரோட்டில் கரையோர குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்பு.
தாய்லாந்து - கம்போடியா இடையே சண்டை நிறுத்தம் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தகவல். எந்த நிபந்தனையும் இன்றி போர் நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புதல்.
மகளிர் உலகக்கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன்.ஜார்ஜியாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சக வீராங்கனை கோனொரு ஹம்பியை வீழ்த்தி வெற்றி.