HEADLINES|நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி முதல் நெதன்யாகுவின் அறிவிப்பு வரை!
மக்களவையில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று விவாதம். மாநிலங்களவையில் நாளை விவாதம் தொடங்கும் என அறிவிப்பு.
ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்றும் அறிவிப்பு.
சோழர்களின் ஆட்சி நாட்டின் பொற்காலங்களில் ஒன்று என பிரதமர் மோடி புகழாரம். பிரிட்டிஷாருக்கு முன்பே ஜனநாயகத்தின் முன்னோடிகளாக சோழர்கள் இருந்ததாகவும் பெருமிதம்.
ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி. பாடல்களை மெய் மறந்து கேட்டு ரசித்த பிரதமர் மோடி மற்றும் பொதுமக்கள்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ். வீடு திரும்பிய முதல்வருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.
கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கு. ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் தடை.
மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் திறப்பு. காவிரி கரையோர மாவட்ட மக்கள் பாதுகாப்புடன் இருக்க எச்சரிக்கை.
பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல். சிறப்பு திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை.
உத்தராகண்ட்டில் மானசா தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் 8 பேர் உயிரிழப்பு. மின்கம்பி அறுந்து விழுந்ததாக பரப்பப்பட்ட வதந்தியால் விபரீதம்.
ஹமாஸ்க்கு எதிரான போர் முடிவடையும் வரை யுத்தம் தொடரும் என நெதன்யாகு அறிவிப்பு. காசாவுக்கு நிவாரணப் பொருட்களுடன் வந்த கப்பலை வழிமறித்த இஸ்ரேல்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. சுப்மன் கில், ராகுல், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து ஏமாற்றம்.