HEADLINES|திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி முதல் 311 ரன் முன்னிலை பெற்ற இங்கிலாந்து வரை!
தூத்துக்குடியில் 4900 கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையமும் திறப்பு.
மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது. தமிழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேச்சு.
பிரதமர் நரேந்திர மோடிக்கு வள்ளுவர் கோட்டம் மாதிரி நினைவுப்பரிசை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
திருச்சி சென்ற மோடியை வரவேற்றார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் விமான நிலையத்திலேயே வழங்கினார்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுவது தனது பாக்கியம் என பதிவு.
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையிலான நட்பு குறித்து கூறுவது எல்லாம் வெறும் பேச்சுதான் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடி திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை. குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மீண்டும் உறுப்பினர் சேர்க்கையை நடத்த அறிவுறுத்தல்.
சிறுநீரகம் உள்ளிட்ட மனித உடல் உறுப்புகளை கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை. தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை.
செங்கல்பட்டில் அன்புமணி ராமதாஸ் 2வது நாளாக நடைபயணம். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என பேச்சு.
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவருக்கு 15 நாட்கள் காவல். நீதிமன்ற உத்தரவை அடுத்து புழல் சிறையில் அடைப்பு.
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு..விநாடிக்கு 75 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
பிஹாரில் உடல் நலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை. ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது நேர்ந்த கொடுமை.
கம்போடியா - தாய்லாந்து இடையேயான மோதல், இந்தியா - பாகிஸ்தான் மோதலை நினைவுப்படுத்துகிறது. போரை நிறுத்தாவிடில் இரு நாடுகளுடம் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளமாட்டேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டம்.
4வது கிரிக்கெட் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 311 ரன் முன்னிலை பெற்றது இங்கிலாந்து. 2வது இன்னிங்சில் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்ட கில், கே.எல். ராகுல்.