HEADLINES | கேரளாவை நெருங்கும் 'விபா' புயல் முதல் மணிப்பூரில் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி வரை!
பிரிட்டன் பயணத்தின் ஒரு பகுதியாக மன்னர் சார்லஸை சந்தித்தார் பிரதமர் மோடி. இருநாட்டு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை.
நடப்பாண்டில் இதுவரை பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கு 67 கோடி ரூபாய் செலவு. 2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் 295 கோடி ரூபாய் செலவானதாக மத்திய அரசு தகவல்.
கர்நாடகாவில் தேர்தல் முறைகேடு நடந்ததற்கு 100 விழுக்காடு ஆதாரம் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தை தப்பவிடமாட்டோம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டம்.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் நீட்டிப்பு. 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் தீர்மானத்தை இன்று தாக்கல் செய்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
பிஹார் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பது குறித்து இந்தியா கூட்டணி பரிசீலனை. தேர்தல் புறக்கணிப்பு தொடர்பான தேஜஸ்வி யாதவின் கருத்தை வழிமொழிந்த காங்கிரஸ்.
அதிமுக கூட்டணிக்கு விஜய், சீமானை இதுவரை அழைக்கவில்லை. புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பதில். எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை.
முக்காடு போடாத குறையாக சென்று பாஜகவுடன் பழனிசாமி கூட்டணி வைத்திருப்பதாகவும் உதயநிதி விமர்சனம்.
வைகோ, பாஜக கூட்டணிக்கு வந்தால் மீண்டும் எம்பி ஆகலாம் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அழைப்பு. அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது என வைகோ திட்டவட்டம்.
கன்னியாகுமரி குளச்சலில் 17 வயது சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாபம். உடலைக் குறைக்க யூடியூப் பார்த்து, திட உணவை தவிர்த்து பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததால் விபரீதம்.
நீலகிரி, தேனி, தென்காசி உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
கேரளாவை நெருங்கும் 'விபா' புயல். இடுக்கி, கோட்டயம் உட்பட 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.
கேரளாவில், கொட்டும் மழையில் சாலை தெரியாமல் போனதால், கூகுள் மேப் பார்த்து பயணித்தபோது விபரீதம். வழி தவறி கால்வாய்க்குள் இறங்கிய கார்., இருவர் பாதுகாப்பாக மீட்பு.
ஏர் இந்தியாவின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் நோட்டீஸ். விமானப் பணியாளர்கள் மேலாண்மை, பயிற்சி விதிகளில் 29 குறைபாடுகளை சுட்டிக்காட்டிய டிஜிசிஏ.
மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகள். நாளை திவ்யா தேஷ்முக் - கோனேரு ஹம்பி பலப்பரீட்சை.