july 19 2025 morning headlines news
முக.முத்து, மோடி, கெஜ்ரிவால்எக்ஸ் தளம்

Headlines: மு.க.முத்து மரணம் முதல் இஸ்ரேல் - சிரியா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, மு.க.முத்து மரணம் முதல் இஸ்ரேல் - சிரியா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் வரை விவரிக்கிறது.
Published on
  • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார்.

  • சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தை தொடர்ந்து, சென்னை - அரக்கோணத்திற்கும் விரைவில் ஏசி ரயில் சேவை வழங்கப்படவுள்ளது.

  • வங்கத்தின் பெருமையை உண்மையாகவே மதிப்பது, பாதுகாப்பதும் பாஜக தான் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

  • சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பகேலின் மகன், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • இந்தியாவில் கடந்த ஒரே ஆண்டில் சுமார் 7 ஆயிரத்து 500 ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

  • காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி விலகுவதாக, அந்த கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவரான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

முக.முத்து, மோடி, கெஜ்ரிவால்
முக.முத்து, மோடி, கெஜ்ரிவால்எக்ஸ் தளம்
  • உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நந்தா தேவி சிகரம், நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையேறுபவர்களுக்காக திறக்கப்பட உள்ளது.

  • பீகாரில் உள்ள மொத்த வாக்காளர்களில் 94.68 சதவீதம் பேர் சிறப்பு திருத்தப் பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  • ஏமன் நாட்டில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள நிமிஷா பிரியாவை மீட்பதற்கு குழுவை அனுப்புவது குறித்து மத்திய அரசே முடிவெடுக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

  • இஸ்ரேல் - சிரியா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com