HEADLINES
HEADLINESpt

HEADLINES|நேட்டோவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா முதல் வெளியானது தலைவன், தலைவி ட்ரெய்லர் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, நேட்டோவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா முதல் வெளியானது தலைவன், தலைவி ட்ரெய்லர் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • ரஷ்யாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால், இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படும் என எச்சரித்திருந்த நேட்டோவுக்கு இந்தியா பதிலடி. நாட்டு மக்களின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்தியா முன்னுரிமை அளிக்கும் என திட்டவட்டம்.

  • மேற்கு வங்கத்திற்கு இன்று பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி. 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

  • இனி அதிகமாக பெங்காலி மொழியை பேசுவேன்; முடிந்தால் தடுப்பு முகாமில் அடைத்து வையுங்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை.

  • பிஹாரில் ஐந்தரை லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் முகவரி பதிவு. 35 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் முகவரிகளில் இல்லாததும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் கண்டுபிடிப்பு.

  • பெருந்தலைவர் காமராஜர் விவகாரத்தில் கலகமூட்டி குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்திற்கு இடம்கொடுக்காதீர். வீண் விவாதங்களை தவிர்க்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

  • காமராஜர் தொடர்பான திமுக எம்.பி. திருச்சி சிவாவின் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம். வரும் தேர்தலில் திமுகவுக்கு பொதுமக்கள் நெத்தியடி கொடுக்க வேண்டும் என பேச்சு.

  • துரை வைகோ அரசியலுக்கு வரக்கூடாதென்று சொன்ன தானே பழிச்சொல்லுக்கு ஆளாகி இருக்கிறேன்... மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேதனை. அதிகாரிகள் செந்தில்வேல், டேவிட்சன் தேவாசீர்வாதம், எஸ்.பி. ஸ்டாலின் என்னை குறிவைத்து டார்ச்சர் செய்கின்றனர்..

  • வாகனம் பறிக்கப்பட்டதாக சர்ச்சையான நிலையில் மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் பரபரப்பு குற்றச்சாட்டு.

  • மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசனின் அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை. தங்கள் தரப்பில் இருந்து எந்த அழுத்தமும் தரப்படவில்லை என மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் விளக்கம்.

  • திருத்தணியில் இடி மின்னலுடன் கொட்டிய கனமழை. சாலைகளில் வெள்ளம்போல் மழைநீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் அவதி.

  • நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்றும் ஆரஞ்ச் அலர்ட். சென்னை, திருவள்ளூர் உட்பட 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.

  • கேரளாவில் அதிகரிக்கும் தெருநாய்க்கடி சம்பவங்களை கட்டுப்படுத்த மாநில அரசு அதிரடி. நோய் பாதித்த, தொற்று நோய்களை பரப்பக்கூடிய தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி.

  • ஈராக்கில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு. விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிட்ட பிரதமர்.

  • பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மழைக்கால அவசரநிலை பிறப்பிப்பு. சாஹான் அணை உடைந்து, பெருக்கெடுத்த வெள்ளம்.

  • நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவான தலைவன், தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் காட்சிகளை பகிர்ந்து கொண்டாட்டம்.

  • ஹாலிவுட் இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன் இயக்கும் "தி ஓடிசி" திரைப்படம் புதிய சாதனை. வெளியீட்டிற்கு ஓராண்டு முன்பே விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com