HEADLINES
HEADLINESpt

HEADLINES|திருப்பரங்குன்றம் முருகன் கோயில் முதல் யமுனை ஆற்றில் மீட்கப்பட்ட மாணவியின் உடல் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, திருப்பரங்குன்றம் முருகன் கோயில் முதல் யமுனை ஆற்றில் மீட்கப்பட்ட மாணவியின் உடல் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா. குன்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பல லட்சம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் கோயில். நான்கு மாட வீதிகளில் பக்தர்கள் கண்டுகளிக்கவும் சிறப்பு ஏற்பாடு.

  • போலியான, தரம் குறைந்த உரங்களை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் என மாநில முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடிதம்.

  • திருக்குறளுக்கு கவிஞர் வைரமுத்து எழுதிய உரையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சொந்தம் கொண்டாட ஆரியத்தில் ஆளில்லாததால், வள்ளுவரை காவியடித்து ஏமாற்ற பார்க்கிறார்கள் என குற்றச்சாட்டு.

  • ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி 2ஆம் கட்ட சுற்றுப்பயணம். புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரப்புரை.

  • 'அன்புமணியுடனான பிரச்சினை நிச்சயம் முடிவுக்கு வரும் என புதிய தலைமுறைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பிரத்யேக நேர்காணல்.

  • காவல் நிலையங்களில் நிகழும் மரணங்களை கண்டித்து விஜய் தலைமையில் தவெகவினர் போராட்டம். வெற்று திராவிட மாடல் சர்க்கார், தற்போது சாரி மா சர்க்காராக மாறிவிட்டதாக விமர்சனம்.

  • சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இரவிலும் தொடர்ந்த மீட்புப் பணிகள். ராட்சத கிரேன்கள் மூலம் ரயில் பெட்டிகள் அகற்றம்.ஒரு பாதையில் மட்டும் ரயில் சேவை தொடக்கம்..

  • மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு ஜூலை 15இல் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை. மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.

  • காணாமல் போன, டெல்லி பல்கலைக் கழக மாணவியின் உடல், யமுனை ஆற்றில் மீட்பு. ஒரு வாரம் தேடி உடலை மீட்ட டெல்லி மற்றும் திரிபுரா காவல் துறை.

  • தெலங்கானாவில் காங்கிரஸ் சட்ட மேலவை உறுப்பினர் நவீனின் அலுவலகம் சூறை. பி.ஆர்.எஸ் மேலவை உறுப்பினர் கவிதாவை விமர்சித்து பேசியதால் ஆதவாளர்கள் ஆத்திரம்.

  • இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காஸாவில் குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழப்பு. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில் தீவிரமடையும் தாக்குதல்.

  • தங்கள் உளவு அதிகாரியை சுட்டுக்கொன்றதற்கு பதிலடியாக ரஷ்ய உளவாளிகளை கொன்ற உக்ரைன். கைது நடவடிக்கையின்போது தப்ப முயன்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்.

  • விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் முதல்முறையாக சாம்பியன். ஸ்பெயின் வீரர் அல்காரசை வீழ்த்தி அபாரம்.

  • இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் கடைசி நாளில் காத்திருக்கும் ட்விஸ்ட். 193 என்ற இலக்கை நோக்கி விளையாடும் இந்திய அணி, 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com