Headlines
Headlinespt

Headlines|ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் முதல் பரவலாக பெய்த மழை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் முதல் பரவலாக பெய்த மழை வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.அ
Published on
  • நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன?. விமானம் புறப்பட்ட சில நொடிகளில் இரு என்ஜின்களுக்கும் எரிபொருள் தடைபட்டதாக முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தகவல்

  • தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி வென்றால் கூட்டணி ஆட்சி என மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும்உறுதி.

  • அதிமுக - பாஜக கூட்டணியில் விஜயை இணைக்க முயற்சிப்போம் என அமித்ஷா சூசகம். தங்களது கூட்டணி இமாலய வெற்றி பெறும் என்றும் சூளுரை.

  • தமிழ்நாட்டின் வளர்ச்சி டெல்லியை அச்சுறுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் பதிவு. பழனிசாமியும், அவரது கட்சியும் தமிழ்நாட்டுடன் அல்ல, டெல்லியுடன் நிற்கிறார்கள் என்றும் விமர்சனம்.

  • பாஜகவை கண்டு அதிமுக அஞ்சவில்லை என எடப்பாடி பழனிசாமி பேச்சு. அமலாக்கத் துறையினர் எப்போது கதவை தட்டுவார்கள் என்ற ஸ்டாலின் நடுக்கத்தில் இருப்பதாகவும் விமர்சனம்.

  • வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து திமுக அரசை கண்டித்து வரும் 20ஆம் தேதி அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம். அன்புமணியின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என ராமதாஸ் திட்டவட்டம்.

  • திருமலா பால் நிறுவன மேலாளர் உயிரிழப்பு வழக்கில் மாதவரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். கொளத்தூர் காவல் துணை ஆணையர் பொறுப்பில் இருந்து பாண்டியராஜன் தற்காலிகமாக விடுவிப்பு.

  • தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது குரூப்-4 தேர்வு. 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களுக்கு 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போட்டி.

  • புதுக்கோட்டையில் முன்விரோதம் காரணமாக தேநீர் கடைக்காரர் மீது அதிமுக நிர்வாகி தாக்குதல். கடைக்குள் நுழைந்து தாக்கிய காட்சிகள் வெளியான நிலையில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.

  • வாக்கி டாக்கி சத்தத்துடன் போலீஸார் போன்று குரல்மாற்றம் செய்து நண்பனிடம் PRANK செய்த இளைஞர். நீண்ட நாள் பிரச்சினையாக மாறி கொலையில் முடிந்த சோகம்.

  • சென்னையின் பல்வேறு பகுதிகளில்சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை. பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், இரவில் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.

  • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அரையிறுதியில் வெளியேறினார் முன்னணி வீரர் ஜோகோவிச். அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

  • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதான ஆட்டம். 2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 145 ரன்கள் குவிப்பு; கே.எல்.ராகுல் அரைசதம்.

  • சாதி, மதம், இனம், மொழி என எல்லா வேறுபாடுகளையும் கடந்து கலையை நேசிப்பவர்கள் தமிழர்கள். வேள்பாரி புத்தக விழாவில் ரஜினி பேச்சு.

  • வேள்பாரி, தனது கனவுப்படம் என இயக்குநர் ஷங்கர் நெகிழ்ச்சி... கேம் ஆஃப் த்ரோன்ஸ், அவதார் போன்று உலகம் போற்றக்கூடிய படைப்பாக வரக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் பேச்சு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com