Headlines: விரைவில் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா முதல் நடிகர்கள் மீது வழக்குப்பதிவு வரை!
* ஆக்சியம்-4 திட்டத்தின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு கடந்த ஜூன் 25ஆம் தேதி புறப்பட்டுச் சென்றனர். 14 நாட்கள் அங்கு தங்கி 60 அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்ட அவர்கள், விரைவில் பூமிக்குத் திரும்ப இருக்கின்றனர்.
* இந்தியாவின் சராசரி இணைய வேகத்தைவிட 16 மில்லியன் மடங்கு வேகமான இணையச் சேவையை உருவாக்கி ஜப்பான் சாதனை படைத்துள்ளது. ஜப்பானிய ஆராச்சியாளர்கள் விநாடிக்கு 1 புள்ளி பெட்டாபிட்கள் என்ற புதிய இணையச் சேவையை அடைந்துள்ளனர்.
* விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட நிஸ்டார் கப்பல் வரும் 18ஆம் தேதி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில், இந்திய கடற்படையில் இணையவுள்ளது.
* ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பிரியா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். 92 ஆண்டுகால நிறுவனத்தின் வரலாற்றில், ஒரு பெண் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகிப்பது இதுவே முதல் முறையாகும்.
* புகழ்பெற்ற நடிகர்களான ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்கள், புகழ்பெற்ற யூடியூபர்கள், சமூகவலைத்தள பிரபலங்கள் என 29 பேர் மீது அமலாக்கத் துறையின் ஐதராபாத் பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
* கோவையில் வாகனச் சோதனையின்போது காரை நிறுத்தாமல் சென்ற இளைஞர்களை பிடித்து காவலர்கள் தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
* ஆகஸ்ட் 3ஆம் தேதி தேனியில் உள்ள மேற்குத் தொடச்சி மலைப் பகுதியில், தானே நேரடியாக சென்று ஆடு, மாடுகளை மேய்க்க உள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
* அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதில் இழுபறி நீடிக்கும் நிலையில் இந்திய குழு மீண்டும் வாஷிங்டன் செல்ல உள்ளது. அடுத்த வாரம் மத்திய வர்த்தக அமைச்சக குழு வாஷிங்டன் செல்லும் எனத் தெரிகிறது.
* பொதுத் துறையைச் சேர்ந்த காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யின் பங்குகளை மேலும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
* சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய கால்பந்து அணி 9 ஆண்டுகளில் இல்லாத சரிவை கண்டுள்ளது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புதிய பட்டியலில் இந்தியா 6 இடங்கள் கீழிறங்கி 133ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.