HEADLINES|ரயில் கட்டண உயர்வு இன்று அமல் முதல் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த ஈரான் வரை!
நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல். கிலோ மீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு.
இனி ஆதார் இணைப்பு இருந்தால்தான் ரயில் தட்கல் டிக்கெட் கிடைக்கும். புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் பெரிய தொழில், பெரிய வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்வு. வீட்டு மின் இணைப்புகள், சிறு வணிகர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் ஏழு பேர் விசைப்படகுடன் கைது. மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது நடவடிக்கை.
போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயலும்போது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டதில் அஜித்குமார் உயிரிழப்பு. சிவகங்கை மடப்புரத்தில் இளைஞர் அஜித்குமார் உயிரிழப்பு குறித்து போலீஸார் எஃப்ஐஆரில் தகவல்.
மடப்புரம் லாக்அப் மரண வழக்கில் ஐந்து போலீஸார் கைது. கொலை வழக்காக மாற்றப்பட்ட நிலையில் காவல் துறை நடவடிக்கை..
உயிரிழந்த அஜித் குமாரின் உடலில் குறைந்தது 18 வெளிப்புற காயங்கள். புதிய தலைமுறைக்கு கிடைத்த பிரேதப் பரிசோதனையின் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.
லாக்அப் மரணத்தில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும். சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் எச்சரிக்கை.
சிவகங்கை மாவட்டம் தனியார் பள்ளி மாணவன் உயிரிழப்பு. உறவினர்கள் சாலை மறியல் போராட்டம். சம்பவ இடத்தில் திருப்பத்தூர் டி.எஸ்.பி. செல்வகுமார் விசாரணை..
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டதாக பழனிசாமி விமர்சனம். தவறான தரவுகளை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவருக்கு போதிய புரிதல் இல்லை என அமைச்சர் டிஆர்பி ராஜா பதில்.
இந்திய விவசாயிகள் கால்நடை வளர்ப்போரை பாதிக்காத வகையில் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி.
தெற்காசிய நாடுகளுக்கான புதிய பிராந்திய அமைப்பை உருவாக்க சீனா, பாகிஸ்தான் தீவிரம். இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கவும் திட்டம் எனத்தகவல்.
போரின் போது இஸ்ரேலுக்கு உதவியவர்களை வேட்டையாடும் ஈரான். 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சுமார் 700 பேரை கைது செய்து விசாரணை.
வடசென்னை கதைக்களத்தில் சிம்புவை வைத்து படம் இயக்கவுள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. ஆட்சேபமில்லா சான்று வழங்க தனுஷ் பணம் கேட்கவில்லை என்றும் விளக்கம்.