இந்தியா
நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறைப்பு
நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறைப்பு
5 ஜி சேவை தொடர்பான வழக்கில், நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் 2 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
5ஜி சேவை அமல்படுத்தப்பட்டால், மனிதர்கள், விலங்குகள் பாதிக்கக்கூடும் எனக் கூறி அதற்கு தடை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ஜூஹி சாவ்லா. இம்மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் ஜூஹி சாவ்லாவுக்கு 20 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது.
அபராதத்தை குறைக்கக் கோரி ஜூஹி சாவ்லா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் அபராதத் தொகையை 2 லட்சம் ரூபாயாக குறைத்தது. மேலும் நடிகைக்கு எதிரான கடுமையான வார்த்தைகளும் நீக்கப்பட்டன.