குப்பையை அகற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நீதிபதி

குப்பையை அகற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நீதிபதி

குப்பையை அகற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நீதிபதி
Published on

கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட் குப்பையை அகற்ற வேண்டும் என துணை நீதிபதி போராட்டத்தில் ஈடுபட்டது கேரளாவில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் காய்கறி மார்க்கெட் உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த மார்க்கெட் பகுதியை ஆய்வு செய்ய எர்ணாகுளம் சட்ட உதவி மைய துணை நீதிபதி பசீர் அந்த பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் மலைபோல் குப்பை கொட்டப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதுமட்டுமல்லாமல் மார்க்கெட் பகுதி என்பதால் அந்தப் பகுதியில் அழுகிய காய்கறிக் கழிவுகள், குப்பைகள் இறைச்சிக் கழிவுகள் என அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றாம் வீசியுள்ளது. இதைக் கண்ட துணை நீதிபதி, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், உடனே குப்பைகளை அகற்ற உத்தரவிட்டார். 

மேலும் குப்பையை அகற்றும் வரை இங்கு இருந்து செல்லப்போவதுமில்லை என்று அங்கே போராட்டத்தில் ஈடுபட்டார். நீதிபதி ஒருவர் நேரடியாக களத்தில் இறங்கி போராடி வருவது சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. உடனே அங்கு விரைந்த அதிகாரிகள் தேங்கி கிடந்த குப்பையை உடனடியாக அகற்றினர். அதன் பின்னே அங்கிருந்து நகர்ந்த பசீர், இந்தப் பகுதியில் குப்பை கொட்டக் கூடாது என்று ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு குப்பை தொடர்ந்து கொட்டி வருகின்றனர் என்றார். கேரளாவில் கடந்த சில மாதங்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. சுகாதார சீர்கேடே இந்நோய்களுக்கு காரணம். எனவே சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com