ஜாமீன் அல்லது பரோல் கோரி நீதிபதி கர்ணன் மனு

ஜாமீன் அல்லது பரோல் கோரி நீதிபதி கர்ணன் மனு

ஜாமீன் அல்லது பரோல் கோரி நீதிபதி கர்ணன் மனு
Published on

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிஎஸ் கர்ணன் தமக்கு ஜாமீன் அல்லது பரோல் வழங்கப்பட வேண்டுமென மேற்கு வங்க ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவையில் கைது செய்யப்பட்ட கர்ணன், கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தமக்கு அளிக்கப்பட்ட தண்டனையில் குறைபாடுகள் இருப்பதாகக் தெரிவித்துள்ள கர்ணன், குறைபாடுகள் களையப்படும் வரை தமக்கு ஜாமீன் அல்லது பரோல் அளிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக, ஆளுநருக்கு தமது வழக்கறிஞர் மூலம் அனுப்பியுள்ள மனுவில், ஆளுநர் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாக கர்ணன் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மனுக்களின் பிரதிகள் மேற்கு வங்க முதலமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கர்ணனின் வழக்கறிஞர் கூறினார்.

முன்னதாக, கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த சி.எஸ்.கர்ணனுக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த மே 9-ம் தேதி 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து தலைமறைவான கர்ணன், தலைமறைவு காலத்திலேயே பணி ஓய்வு பெற்றார். அவரை மேற்கு வங்க போலீஸார் கடந்த 20-ம் தேதி கோவை அருகே கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com