புதிய ஜனாதிபதிக்கு நீதிபதி கர்ணன் திடீர் மனு

புதிய ஜனாதிபதிக்கு நீதிபதி கர்ணன் திடீர் மனு

புதிய ஜனாதிபதிக்கு நீதிபதி கர்ணன் திடீர் மனு
Published on

முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் தனது தண்டனையைக் குறைக்க வேண்டுமென்று கோரி இன்று பதவியேற்றுள்ள குடியரசு தலைவருக்கு மனு அனுப்பியுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. அதையடுத்து, மேற்கு வங்க காவல் துறையினர் தமிழகத்திற்கு வந்து ஜூன் 20ஆம் தேதி அவரை கைது செய்து, கொல்கத்தாவுக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.

தற்போது கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நீதிபதி கர்ணன் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க வேண்டுமென்று கோரி, இன்று பதவியேற்றுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மனு அனுப்பியுள்ளார். அவரது மனுவை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com