நள்ளிரவில் பயங்கரம்: பெண் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு!
டெல்லியில், பெண் பத்திரிகையாளர் மீது நள்ளிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நொய்டாவைச் சேர்ந்தவர் மிதாலி சந்தோலா. செய்தி சேனல் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர், வேலையை முடித்துவிட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். கிழக்கு டெல்லியில் உள்ள அசோக் நகர், தரம்ஷிலா நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அருகே வந்தபோது, அவர் காரை ஒரு கார் முந்திச் சென்றது. அதில் முகமூடி அணிந்திருந்த இருந்த இரண்டு பேர் இருந்தனர். அவர்கள் இவர் கார் மீது திடீரென முட்டைகளை வீசினர். அதிர்ச்சி அடைந்த மிதாலி, காரை நிறுத்தாமல் சென்றார்.
இதையடுத்து அவர்கள், மிதாலியின் காரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில், அவர் நெற்றியிலும் கைகளிலும் குண்டு பாய்ந்தது. பின்னர் அவர்கள் தப்பிவிட்டனர். மிதாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள னர்.
குடும்ப பிரச்னை காரணமாக, இந்த துப்பாக்கிச்சூடு நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.