ஐஏஎஸ் அதிகாரி கார் மோதி பத்திரிகையாளர் உயிரிழப்பு

ஐஏஎஸ் அதிகாரி கார் மோதி பத்திரிகையாளர் உயிரிழப்பு

ஐஏஎஸ் அதிகாரி கார் மோதி பத்திரிகையாளர் உயிரிழப்பு
Published on

திருவனந்தபுரத்தில் ஐஏஎஸ் அதிகாரியின் கார் மோதியதில் பத்திரிகையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மலையாள நாளிதழ் ஒன்றின் திருவனந்தபுரம் செய்தியாளராக பணியாற்றியவர் கே.எம்.பஷீர் (35). மலப்புரத்தைச் சேர்ந்த இவர், அங்குள்ள மியூசியம் சாலையில் பைக்கில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார் மோதியதில்  உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய காரில் ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன் இருந்ததாகவும் அவர் போதையில் காரை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் அவரும் காயம டைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தான் காரை ஓட்டவில்லை என்றும் தனது பெண் நண்பர் வாஃபா பெரோஸ்தான் காரை ஓட்டியதாகவும் அதிகாரி ஸ்ரீராம் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், நேரில் பார்த்தவர்கள் ஸ்ரீராம்தான் காரை வேகமாக ஓட்டி வந்ததாகத் தெரிவித் துள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

மறைந்த பஷீருக்கு ஜசீலா என்ற மனைவியும் ஜன்னா, ஆஸ்மி என்ற குழந்தைகளும் உள்ளனர். 
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com