யானையை காப்பாற்ற சென்ற மீட்புப் படகு வெள்ளத்தில் மூழ்கியது - பத்திரிகையாளர் உயிரிழப்பு

யானையை காப்பாற்ற சென்ற மீட்புப் படகு வெள்ளத்தில் மூழ்கியது - பத்திரிகையாளர் உயிரிழப்பு
யானையை காப்பாற்ற சென்ற மீட்புப் படகு வெள்ளத்தில் மூழ்கியது - பத்திரிகையாளர் உயிரிழப்பு

ஒடிசாவில் மகாநதி வெள்ளத்தில் சிக்கிய யானையை காப்பாற்ற சென்ற பேரிடர் குழுவினரின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மீட்பு படையினருடன் பிரத்யேகமாக செய்தி சேகரிக்க படகில் சென்ற செய்தியாளர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள மகாநதியை கடக்க முயன்ற யானை, வெள்ளத்தில் சிக்கி கொண்டது. யானையை மீட்க ஒடிசா பேரிடர் மீட்புக் குழுவினர், மீட்பு படகில் மகாநதியில் சென்றனர். அவர்களுடன் ஓடிசா தொலைக்காட்சியைச் சேர்ந்த செய்தியாளரும், ஒளிப்பதிவாளரும் பிரத்யேக மீட்பு காட்சியை பதிவு செய்ய மீட்பு படகில் சென்றனர். யானையை கரைப்பகுதியை நோக்கி விரட்ட முயன்றபோது, கரையோரத்தில் இருந்த மக்கள் கூட்டத்தை கண்டு யானை மீண்டும் வெள்ளத்திற்குள் சென்றது. முந்தாலி பாலம் அருகே தொடர்ந்து யானையை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டபோது, மீட்பு படகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கியது.

வெள்ளத்தில் தத்தளித்த மீட்பு படையினர் பாலத்திலிருந்து கயிறு மூலம் மீட்கப்பட்டனர். செய்தியாளர் அரிந்தம் தாஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் பிரவத் சின்ஹா ஆகியோர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். இதில் அரிந்தம் தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் வெள்ளத்தில் சிக்கிய யானையை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com