முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கும் ஸ்வப்னாவுக்கும் கூட்டு கணக்கு - பட்டயக் கணக்காளர் தகவல்?

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கும் ஸ்வப்னாவுக்கும் கூட்டு கணக்கு - பட்டயக் கணக்காளர் தகவல்?
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கும் ஸ்வப்னாவுக்கும் கூட்டு கணக்கு - பட்டயக் கணக்காளர் தகவல்?

கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளரும், தகவல் தொழில்நுட்பத்துறையின் முன்னாள் அரசு செயலாளருமாக இருந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கும், தங்க கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.


கேரளா தங்க கடத்தல் வழக்கை தனி வழக்காக பதிவு செய்து விசாரித்து வரும் சுங்கத்துறையினர், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் கடந்த 14 ஆம் தேதி ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 23, 27, 28 ஆகிய தேதிகளில் தேசிய புலனாய்வு முகமை மூன்று கட்டங்களாக 25 மணி நேரம் விசாரணை நடத்தியது.

சுங்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை ஆகிய இரு தரப்பினரின் விசாரணையில் தங்க கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகளுடனான செல்போன் உரையாடல்கள், உள்நாட்டு வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான ஆவணங்கள், விருந்துகளில் பங்கேற்றதற்கான சான்றுகள் ஆகியவைத் திரட்டப்பட்டுள்ளதாகவும், அவை வாக்குமூலங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து சிவசங்கரனின் பட்டயக்கணக்காளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பட்டயக் கணக்காளர்  “சிவசங்கரன் அறிவுரைப்படிதான் ஸ்வப்னா வங்கியில் பாதுகாப்பு பெட்டக கணக்கு துவக்கினார் என்றும், பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க ஸ்வப்னாவிற்கும் சிவசங்கரனுக்கும் கூட்டுக்கணக்கு உள்ளது என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து சிவசங்கரனின் இதர வங்கிக்கணக்குகள், அதில் ஸ்வப்னா மற்றும் இதர தங்க கடத்தல் பிரதிகளுடனான இணைப்புக் கணக்குகள் குறித்த சுங்கத்துறை விசாரணையை துவக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com