ஆசாராம் பாபு மனுவை தள்ளுபடி செய்தது ஜோத்பூர் நீதிமன்றம்

ஆசாராம் பாபு மனுவை தள்ளுபடி செய்தது ஜோத்பூர் நீதிமன்றம்
ஆசாராம் பாபு மனுவை தள்ளுபடி செய்தது ஜோத்பூர் நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாமியார் ஆசாராம் பாபுவின் மனுவை ஜோத்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

கடந்த 2013-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, ஜோத்பூர் அருகே இருக்கும் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அந்தச் சிறுமியின் பெற்றோர், டெல்லி காவல் நிலையத்தில் ஆசாராம் பாபு மீது புகார்  அளித்தனர். வழக்கை விசாரித்த காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் ஆசாராம் பாபு உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீதான வழக்கு ராஜஸ்தானின் ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இவ்வழக்கில் ஆசாராம் பாபு அடைக்கப்பட்டிருந்த சிறைக்கே சென்ற நீதிபதி, பாபு உட்பட 3 பேரை குற்ற வாளிகள் என்று தீர்ப்பளித்தார். ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனையும் மற்ற 2 பேருக்கு 20 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை உடல்நிலையை கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஆசாராம் பாபு, ஜோத்பூர் நீதிமன்றத்தில் ம்னு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com