சல்மான் கான் வழக்கில் 18ம் தேதி தீர்ப்பு.. ஜோத்பூர் நீதிமன்றம் அறிவிப்பு

சல்மான் கான் வழக்கில் 18ம் தேதி தீர்ப்பு.. ஜோத்பூர் நீதிமன்றம் அறிவிப்பு

சல்மான் கான் வழக்கில் 18ம் தேதி தீர்ப்பு.. ஜோத்பூர் நீதிமன்றம் அறிவிப்பு
Published on

சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் வரும் 18ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

படப்பிடிப்புக்காக கடந்த 1998ம் ஆண்டு அக்டோபரில் ராஜஸ்தான் சென்ற நடிகர் சல்மான் கான், அரியவகை மான்களை உரிமம் முடிந்துபோன துப்பாக்கிகளை வைத்து வேட்டையாடியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில் வழக்கின் தீர்ப்பு வரும் 18ம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ள ஜோத்பூர் நீதிமன்றம் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சல்மான் கானுக்கு உத்தரவிட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com