காவலர் மற்றும் ரைபிள் மேன் பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட எஸ்.எஸ்.சி

காவலர் மற்றும் ரைபிள் மேன் பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட எஸ்.எஸ்.சி

காவலர் மற்றும் ரைபிள் மேன் பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட எஸ்.எஸ்.சி
Published on

‘‘மத்திய ஆயுத படைகள் (CAPFs), என்ஐஏ, எஸ்எஸ்எப் ஆகியவற்றில் காவலர் (பொதுப் பணி) மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் ரைபிள் மேன்(பொதுப் பிரிவு) தேர்வு, 2021’’ குறித்த அறிவிப்பை மத்தியப் பணியாளர் தேர்வாணையம்(SSC) 2021, ஜூலை 17ஆம் தேதியன்று வெளியிட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை ssc.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 31-8-2021 மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி 02-09-2021.

காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் வண்ண பாஸ்போர்ட் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அது தேர்வு அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 3 மாதத்துக்கு மேல் பழையதாக இருக்க கூடாது. போட்டோ எடுத்த தேதியும், போட்டோ மீது எழுதப்பட்டிருக்க வேண்டும்.  போட்டோ மீது தேதி இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தெற்கு பிராந்தியத்தில், முதலாம் அடுக்கு கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூர் மற்றும் புதுச்சேரி, ஆந்திராவில் சிராலா, குண்டூர், காக்கிநாடா, கர்ணூல், நெல்லூர், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம், விஜயநகரம்; தெலங்கானாவில் ஐதராபாத், கரீம் நகர் மற்றும் வாராங்கல் ஆகிய 21இடங்கள் மற்றும் மையங்களில் நடக்கும். 

இவ்வாறு சென்னை மத்தியப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தின் இணை செயலாளர் மற்றும் மண்டல இயக்குனர் கே.நாகராஜா விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Source : https://pib.gov.in/

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com