மாணவர்கள் தொடர் போராட்டம்  - கட்டண உயர்வை வாபஸ் பெற்றது ஜேஎன்யூ

மாணவர்கள் தொடர் போராட்டம்  - கட்டண உயர்வை வாபஸ் பெற்றது ஜேஎன்யூ

மாணவர்கள் தொடர் போராட்டம்  - கட்டண உயர்வை வாபஸ் பெற்றது ஜேஎன்யூ
Published on

கல்விக் கட்டண உயர்வு வாபஸ் பெறப்படுவதாக ஜேஎன்யூ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் செயல்பட்டு வரும் பிரபலமான பல்கலைக் கழகங்களில் மிகவும் முக்கியமானது ஜே.என்.யூ. எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக் கழகத்தில் கல்விக்‌‌ கட்‌‌டணம், விடுதி கட்டணம் ஆகியவை அதிகளவில் உயர்த்தப் பட்டிருப்பதாகவும் ஆடைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், கல்விக் கட்டண உயர்வு மற்றும் விடுதி கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை எதிர்த்து ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் போராடி வருகின்றனர். கல்விக் கட்டண உயர்வை அரசு திரும்ப பெறவேண்டும் என்று கோரிக்கையை வைத்து ஒருவாரமாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், கட்டண உயர்வை ஜேஎன்யூ நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது. “ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தில் கொண்டு வரப்பட்ட கல்வித் தொகை மற்றும் விடுதி கட்டண உயர்வு திரும்ப பெறப்பட்டுள்ளது. அத்துடன் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவு மாணவர்களுக்கு உதவித் தொகை திட்டம் கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆகவே போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் வகுப்புகளுக்கு திரும்ப வேண்டும்” ஜேஎன்யூ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com