விஜய் ரூபானி ஆதரவு எம்எல்ஏக்கள் பட்டியல்: இன்று மாலை ஆளுநரிடம் அளிப்பு

விஜய் ரூபானி ஆதரவு எம்எல்ஏக்கள் பட்டியல்: இன்று மாலை ஆளுநரிடம் அளிப்பு

விஜய் ரூபானி ஆதரவு எம்எல்ஏக்கள் பட்டியல்: இன்று மாலை ஆளுநரிடம் அளிப்பு
Published on

 குஜராத் பாஜக தலைவர் ஜிதுபாய் வகானி அம்மாநில ஆளுநரை சந்தித்து விஜய் ரூபானி ஆதரவு எம்எல்ஏக்கள் பட்டியலை அளிக்கவுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் அண்மையில் சட்டப்பேரவை தேர்தல் நடைப்பெற்றது. இதில் பாஜக 99 இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இதனையடுத்து குஜராத் முதலமைச்சராக உள்ள விஜய் ரூபானி, ஆளுநர் ஓ.பி.கோஹ்லியிட‌ம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். அதேபோல துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களும் தங்களின் ராஜினாமாவை வழங்கினர். இதனை ஏற்றுக்கொண்ட‌ ஆளுநர், புதிய அரசு அமையும் வரையில் காப்பந்து அரசாக நீடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

குஜராத் முதல்வரை தேர்ந்தெடுக்க பாஜக ஒரு தேர்வுக் குழுவை நியமித்திருந்தது. இறுதியாக விஜய் ரூபானியை நேற்று மீண்டும் முதல்வராக தேர்வு செய்து பாஜக அறிவித்தது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, குஜராத் பாஜக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு விஜய் ரூபானியை தேர்வு செய்துள்ளதாக அறிவித்தார். இந்நிலையில்  குஜராத் பாஜக தலைவர் ஜிதுபாய் வகானி இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநர் ஓ.பி. கோஹ்லியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் ரூபானியின் ஆதரவு எம்எல்ஏக்களின் பட்டியலை ஆளுநரிடம் அளிப்பார் என தகவல் தெரிவிக்கிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com