தாமரை வடிவில் ஜிலேபி: உ.பி. பாஜக ஆதரவாளரின் புதிய உத்தி
உத்தரப்பிரதேச மாநிலம் தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர் தாமரை வடிவில் ஜிலேபி தயாரித்து விற்று வருகிறார்.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு தேர்தல் 7 கட்டமாக நடக்கிறது. 73 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்தநிலையில், லக்னோவில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர் ஒருவர் தாமரை வடிவில் ஜிலேபி தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மக்களின் ஆதரவை பெற கட்சியினர் புதுப்புது உத்திகளை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில் லக்னோவை சேர்ந்த மோடி ஆதரவாளர் ஒருவர், தனது இனிப்பு கடையில் தாமரை வடிவத்திலும் மோடியின் பெயர் வடிவத்திலும் ஜிலேபிகளை தயார் செய்து விற்று வருகிறார். இந்த ஜிலேபிகளை பாரதிய ஜனதா வேட்பாளர்கள் வாங்கி மக்களுக்கும் தொண்டர்களுக்கும் விநியோகித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

