இந்தியா
சாலையில் படுத்திருந்த மாற்றுத்திறனாளியை தாக்கிய போலீஸ்
சாலையில் படுத்திருந்த மாற்றுத்திறனாளியை தாக்கிய போலீஸ்
சாலையில் படுத்திருந்து மாற்றுத்திறனாளியை அப்புறப்படுத்த போலீஸார் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக பலர் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்சத்பூரில் சாலையில் மாற்றுத்திறனாளி ஒருவர் விடிந்தது தெரியாமல் படுத்திருந்துள்ளார். அவரைக் கண்ட போலீஸார் உடனடியாக எழுந்து செல்லுமாறு கூறியுள்ளனர். அவருக்கு முழங்கால் பகுதி வரை ஒருகால் இல்லாததால் உடனடியாக எழுந்து செல்ல முடியவில்லை. இதையடுத்து அவரை அடித்து உதைத்த போலீஸார், இழுத்துச்சென்று சாலையோரம் தள்ளியுள்ளனர். இதனால் அந்த மாற்றுத்திறனாளிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு மனித உரிமை ஆணையத்தினர் உட்பட பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.