டிச.29இல் ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்

டிச.29இல் ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
டிச.29இல் ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற ‘ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா’ கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள், நேற்று வெளியாகின. இதில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் 47 இடங்களை பிடித்தன. ஆளும் கட்சியாக இருந்த பாஜக 25 இடங்களை பிடித்தது. இதையடுத்து காங்கிரஸ் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக தேர்தலில் களமிறக்கப்பட்ட ஹேமந்த் சோரனே முதல்வராக பதவியேற்பார் என அறிவிப்பு வெளியாகியது.

இந்நிலையில் இன்று ஜார்க்கண்ட் ஆளுநர் திரெளபதி முர்முவை ஹேமந்த் சோரன் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து வரும் 29ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த், தங்களுக்கு 50 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறினார். அத்துடன் 29ஆம் தேதி பதவியேற்பதாகவும் உறுதியளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com