ஜார்க்கண்ட் | முன்னிலையில் I.N.D.I.A கூட்டணி; சூடுபிடிக்கும் களம்! மிகுந்த எதிர்ப்பார்ப்பு ஏன்?
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தொடக்கத்தில் இருந்தே பின்னடைவில் இருந்த I.N.D.I.A கூட்டணி தற்போது முன்னிலையை பெற்றுள்ளது.
81 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. முதற்கட்டமாக கடந்த நவம்பர் 13ஆம் தேதி, 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து 2வது கட்டமாக, நவம்பர் 20ஆம் தேதி 38 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக கடந்த நவம்பர் 13ஆம் தேதி, 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து 2வது கட்டமாக, நவம்பர் 20ஆம் தேதி 38 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்தநிலையில், காலை 8 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + காங்கிரஸின் I-N-D-I-A கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையே நெக் டூ நெக் போன்று போட்டி நிலவியது. இதில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்தது.
இந்த நிலையில், தற்போதைய 11:15 மணி நிலவரப்படி ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருக்கிறது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி - 49
பாஜக கூட்டணி - 30
பிற கட்சிகள் - 2
இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
நட்சத்திர வேட்பாளர்கள் யார்?
சம்பாய் சோரன்
இர்ஃபான் அன்சாரி
சுதேஷ் மஹடோ
ஜெய்ராம் மஹடோ
பாபுலால் மரண்டி
ராமேஷ்வர்
அமர் குமார் பௌரி
பசந்த் சோரன்
முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவது ஏன்?
ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா, பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித்தலைவர் அமர் குமார் பௌரி உள்ளிட்ட 528 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது மாநில அரசியலில் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
இதேபோல், ஊழல் புகாரில் சிக்கி ஹேமந்த் சோரன் சிறைக்கு சென்று வந்தது இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடுமோ என கருதப்படுகிறது.