3 நாட்களாக ரயில் கழிவறையில் பயணம்; கதவை உடைத்து ஜார்க்கண்ட் இளைஞரைப் பிடித்த காவல்துறை!

கேரளா சென்ற ரயிலில் முன்பதிவு பெட்டியில் மூன்று நாட்கள் கழிவறையில் பயணித்த வடமாநில இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு விரைவு ரயில் ஒன்று சென்றுள்ளது. இதில் முன்பதிவு பெட்டி ஒன்றில் மூன்று தினங்களாக கழிவறை மூடி இருப்பதாக ரயில்வே துறைக்கு புகார் சென்றுள்ளது. அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில், சம்பந்தப்பட்ட பெட்டியின் கழிவறை கதவை உடைத்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டனர்.

அப்போது, அதனுள் 18 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞர் உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது தெரியவந்தது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com