\
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசம்புதிய தலைமுறை

நாட்டையே உலுக்கிய சம்பவம்! மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து... பரிதாபமாக உயிரிழந்த 10 குழந்தைகள்!

உத்தரப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Published on

உத்தர பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து நிகழ்ந்த பிரிவில் 54 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தீ விபத்தில் சிக்கிய சில குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 35க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசம்
தெலங்கானா | போக்குவரத்துப் பணியில் திருநங்கைகள்.. புதிய திட்டம் அறிவிப்பு!

இதனிடையே, துயர சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில்,இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய 2 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com