இந்தியா
நடுவானில் மோதலில் ஈடுபட்ட ஆண் - பெண் விமானிகள் சஸ்பெண்ட்!
நடுவானில் மோதலில் ஈடுபட்ட ஆண் - பெண் விமானிகள் சஸ்பெண்ட்!
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் விமானியும்-சக பெண் விமானியும், சண்டையிட்டுக் கொண்டதால் அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒன்றாம் தேதி லண்டனில் இருந்து 324 பயணிகளுடன் மும்பை வந்த விமானத்தில், விமானி-சக பெண் விமானியை கன்னத்தில் அறைந்ததால் அவர் காக்பிட் அறையை விட்டு கோபத்துடன் வெளியேறினார்.
மேலும், அவர் கண்ணீர் விட்டு கதறியதால் விமான பணியாளர்கள் செய்வதறியாது திகைத்ததுடன், பெண் விமானியை சமாதானம் செய்து காக்பிட் அறைக்கு அனுப்பினர். இந்நிலையில் விமானம் பாதுகாப்பாக மும்பையில் தரையிறங்கியதை அடுத்து, இது தொடர்பான விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், விமான போக்குவரத்து துறை இயக்ககம் சக விமானியின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.